ஆசிரியப் பணி: தினமணி நடுப்பக்கக் கட்டுரைகள் - Kalviseithi
ads
Responsive Ads Here

Sunday, December 26, 2021

ஆசிரியப் பணி: தினமணி நடுப்பக்கக் கட்டுரைகள்

ஒசூர் அருகே உள்ள "மாசி நாயக்கன்பள்ளி' என்ற ஊரில் உள்ள பள்ளியில் ஆசிரியை ஒருவர் மாணவரால் அண்மையில் தாக்கப்பட்டுள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் ஆசிரியை ஒருவரை மாணவர் ஒருவர் கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கான சூழல்கள் குறித்தும், இனி இதுபோல் நடக்காமல் இருப்பதற்கான வழிமுறைகள் குறித்தும் அனைத்துத் தளங்களிலும் விவாதிக்கப்பட வேண்டும்.

குற்றம் செய்ய மாணவர்கள் மீது மட்டும் குறை கூறிவிட்டு இத்தகைய நிகழ்வுகளைக் கடந்து செல்ல முடியாது. ஆசிரியர், பெற்றோர், கல்வித்துறை, ஊடகங்கள் ஆகிய நான்கு காரணிகளும் இதுபோன்ற நிகழ்வுகளுக்குப் பொறுப்பாவர்.

குற்றமே இல்லாமல் இருப்பதற்கு ஆசிரியர்கள் தேவ தூதர்கள் இல்லை. ஆசிரியர் பணிக்கு வருவதற்கு முன்போ அல்லது வந்த பிறகும்கூட தங்களுக்குக் கிடைக்கும் அனுபவங்களை வைத்து தங்களைத் தாங்களே அந்தப் பணிக்கு ஏற்றவாறு தயார்படுத்திக் கொள்பவர்களே சிறந்த ஆசிரியர்களாகத் திகழ்கின்றனர். கல்வித் தகுதியும், பதவியும் மட்டும் ஒருவரை ஆசிரியராக உயர்த்தி விடாது. மாணவர், பெற்றோர் என இரு தரப்பினரும் தங்களை மதிக்கும் அளவிற்கு ஆசிரியர்கள் தங்களை உயர்த்திக் கொள்ள வேண்டும். சிறப்பாக பாடம் கற்பிப்பதால் மட்டும் ஆசிரியர்கள் மாணவர்கள் மனதில் இடம்பிடிப்பதில்லை. ஆசிரியர்கள் மாணவர்களிடம் காட்டும் அக்கறையும், அன்புமே மாணவர்களை ஆசிரியரின் பால் ஈர்க்கிறது. பெற்றோரைப் போல நம் மீது இவர்களுக்கு அன்பு உள்ளது என்ற எண்ணத்தை மாணவர்கள் மனதில் உருவாக்கும் ஆசிரியர்களே மாணவர்களால் பெரிதும் மதிக்கப்படுகின்றனர்.

முந்தைய காலங்களில் திண்ணைப் பள்ளிக்கூடங்களில் பாடம் கற்பித்த ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மத்தியில் உயர்ந்த மதிப்பு இருந்தது. கிராமப்புற ஆசிரியர்களுக்கு ஊர் பஞ்சாயத்தில் நியாயம் சொல்லும் அளவிற்கு மரியாதை இருந்தது.

தாங்கள் பணியாற்றும் பள்ளியைச் சுற்றியுள்ள பகுதியிலேயே ஆசிரியர்கள் வசித்ததால் ஊர் மக்கள் அவர்களோடு ஒன்றாகக் கலந்து பழகினர். ஆசிரியர்களை தங்களில் ஒருவராக நினைத்தனர். ஆனால், தற்போது நகர்மயமாதலால் ஆசிரியர்கள் வெளியூரில் தங்கிக்கொண்டு, பணியாற்றுவதற்கு மட்டும் பள்ளி உள்ள பகுதிக்கு வந்து செல்கின்றனர். இதனால் பெற்றோருக்கும் ஆசிரியருக்கும் இடையே உள்ள பிணைப்பு குறைந்து, ஆசிரியர்கள் அந்நியப்பட்டுப் போய்விட்டனர்.

மாணவர்களுக்கு ஏற்ற வகையில் பாடம் கற்பிக்க, மாணவர்களுடைய பின்புலம், குடும்பச் சூழல் ஆகியவை ஆசிரியர்களுக்கு நன்றாகப் புரிந்திருக்க வேண்டும். அதற்கான வாய்ப்பு இக்காலத்தில் அரிதாகிவிட்டது. இருந்தாலும், மாணவர்களின் மனதில் அரியாசனம் போட்டு அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் பலர் இன்றும் பணியில் உள்ளனர் என்பதும் உண்மை.

ஆசிரியர்கள் சொல்வதைக் கேட்டு அவற்றை மாணவர்களைக் கடைப்பிடிக்க வைப்பதில் ஆசிரியர்களின் பங்கு ஐம்பது சதவீதம் என்றால், மீதி ஐம்பது சதவீதம் பெற்றோரைச் சார்ந்தது. வீட்டில் தங்கள் பிள்ளைகளிடம் அவர்களுடைய ஆசிரியர்களைப் பற்றி பேசும் பெரும்பாலான பெற்றோர் ஒருமையில் பேசுவதையும், கேலியாகப் பேசுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளனர். இதுவே மாணவர்கள் மனதில் தங்கள் ஆசிரியர்களைப் பற்றி தாழ்வான பிம்பம் ஏற்படுவதற்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. ஆசிரியர்களை மதிக்காத மாணவர்கள் பிற்காலத்தில் தங்களையும் மதிக்க மாட்டார்கள் என்பதைப் பெற்றோர் உணர வேண்டும். தங்கள் பிள்ளைகள் ஆசிரியர்களைப் பற்றி குறையோ, புகாரோ கூறினால் அதை அப்படியே நம்பிவிடாமல் அவர்களிடம் தீர விசாரித்து, பிறகு ஒரு முடிவுக்கு வரவேண்டியது பெற்றோரின் கடமை. ஆசிரியர்கள் மீது தவறு இருந்தால் உடனடியாக பெற்றோர் பள்ளியின் தலைமையாசிரியரிடம் தெரிவிக்க வேண்டும். அப்போதுதான் விரும்பத்தகாத நிகழ்வுகள் வகுப்பறையில் நடக்காமல் இருக்கும். அதேநேரம், தங்கள் பிள்ளைகளின் மீது தவறு இருந்தால் அவர்களுக்குத் தக்க அறிவுரை கூறித் திருத்த வேண்டும்.

பெற்றோர்கள், பள்ளிக்குச் செல்லும்போது, சிறப்பாகப் பணியாற்றும் ஆசிரியர்களை மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் முன்பாக இரண்டு வார்த்தை பாராட்டினால் அது ஆசிரியர்களுக்குப் பெரும் மகிழ்ச்சியைத் தரும்.

முன்னேறிய நாடுகளில் பெற்றோர்-ஆசிரியர் சந்திப்பு மாதம் ஒருமுறையாவது நடைபெறுகிறது. அது வெறும் சடங்காக இல்லாமல் ஆசிரியரும் பெற்றோரும் மனம்விட்டுப் பேசி கலந்துரையாடும் நிகழ்வாகவும் அமைகிறது. தங்கள் கண்ணெதிரே பெற்றோரும் ஆசிரியரும் கலந்துரையாடுவது மாணவர்கள் மனதில் ஆசிரியர்கள் மேல் ஒரு நன்மதிப்பை உருவாக்கும்.

ஆசிரியர்கள் தவறிழைத்தாக வரும் செய்திகளின் உண்மைத்தன்மை குறித்து விசாரித்து அதன் பின்னரே காட்சி ஊடகங்கள் செய்தியை வெளியிட வேண்டும். பரபரப்புக்காக தவறான செய்திகளை வெளியிடக் கூடாது. அப்படிச் செய்வது ஆசிரியர்களுக்கு அச்சத்

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot