மத்திய அரசின் கல்வி உதவித் தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு - Kalviseithi
ads
Responsive Ads Here

Saturday, December 25, 2021

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை - விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

மத்திய அரசின் கல்வி உதவித் தொகை சிறுபான்மையின மாணவர்கள்

விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

திருவள்ளுர், டிச. 23: சிறுபான்மையினர் மாணவ, மாணவிகள் மத் திய அரசின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவகா சம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: சிறுபான்மையினருக்கான பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாண வர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க கால அவ காசம் ஏற்கெனவே கடந்த 15-ஆம் தேதி முடிவடைந்தது.

இந்த நிலையில், மாணவ, மாணவிகளின் நலன் கருதி பள்ளி மேற் படிப்பு, வருவாய் மற்றும் தகுதி அடிப்படையிலான கல்வி உதவித் தொகைக்கு (புதியது மற்றும் புதுப்பித்தல்) விண்ணப்பிக்க கால அவ காசம் வரும் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

அதனால், நிகழாண்டில் பள்ளி மேற்படிப்பு, வருவாய் தகுதி அடிப் படையிலான கல்வி உதவித்தொகை பெற புதியது மற்றும் புதுப் பித்தலுக்குத் தகுதியான மாணவர்கள் அனைவரும் www.schol arships.gov.in மற்றும் www.minorityaffairs.gov.in/schemes என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்தி தகுதியான மாணவர்கள் அனைவரும் தேசிய கல்வி உதவித் தொகை இணையதளத்தில் உடனே விண்ணப்பித்து, அதற்கான பதிவிறக்கம் செய்த விண்ணப் பத்தை அந்தந்த கல்வி நிலையங்களில் ஒப்படைத்து பயன்பெறலாம்.

மேலும், புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு வருவாய்ச் சான்று சமர்ப் பிக்க வேண்டிய அவசியமில்லை. அதேபோல், ஆதார் விவரங்களில் பெயர் மாற்றம் காரணமாக புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்காதவர்களும் மேற்குறிப்பிட்ட நாளுக்குள் விண்ணப்பிக்கலாம்.

மேலும், இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலு வலக வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை நேரில் அணுகி விவ ரங்களை அறிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot