BC / MBC / DNC வகுப்பைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பு உயர்வு! - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 24, 2021

BC / MBC / DNC வகுப்பைச் சார்ந்த கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான ஆண்டு வருமான வரம்பு உயர்வு!

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் வகுப்பைச் சார்ந்த கல்லூரி மாணாக்கர்களுக்கான கல்வி உதவித்தொகை திட்டத்திற்கான பெற்றோரின் ஆண்டு வருமான வரம்பு உயர்த்தப்பட்டுள்ளது. 2021-22ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவனங்கள் மற்றும் தனியார் தொழிற்கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர். மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,00,000/- லிருந்து ரூ.2,50,000/- ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது.

அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிவ/ மிபிவ/ சீம மாணவ / மாணவியருக்கு இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் 2021-22ம் ஆண்டிற்கான முதுகலை (6TLD. 6). எம்.காம்.. எம்.எஸ்.ஸி, எம்.பில்., பிஎச்.டி.) பாலிடெக்னிக், (டிப்ளமோ-மூன்று ஆண்டு பட்டயப்படிப்பு) தொழிற்படிப்பு (மருத்துவ படிப்புகளான எம்.பி.பி.எஸ்., கால்நடை மருத்துவம், பல் மருத்துவம், சித்த மருத்துவம், போன்ற மருத்துவ பிரிவுகளுக்கும், வேளாண்மை பொறியியல், சட்டம்) போன்ற படிப்புகளில் பயிலும் பிவ மிபிவ / சீம மாணவ மாணவியர்கள் புதியது விண்ணப்பங்கள் விண்ணப்பிக்க பெற்றோரது ஆண்டு வருமானம் ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை அல்லது பிற்படுத்தப்பட்டோர் நல இயக்கக மின்னஞ்சல் முகவரி dir-bcmw@nic.in மற்றும் தொலைப்பேசி எண் 044-29515942 மூலம் பிற்படுத்தப்பட்டோர் நல இயக்ககத்தை அணுகலாம்.

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot