'இலக்கிய மாமணி' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன! செய்தி வெளியீடு எண்:1466 நாள்:31.12.2021 - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 31, 2021

'இலக்கிய மாமணி' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன! செய்தி வெளியீடு எண்:1466 நாள்:31.12.2021

'இலக்கிய மாமணி' விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கபடுகின்றன!

செய்தி வெளியீடு எண்:1466

நாள்:31.12.2021

செய்தி வெளியீடு

மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 97ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு அரசால் இயல், இசை, நாடகத்தில் சிறந்து விளங்கும் கலைஞர்களுக்கு தமிழ்நாடு அரசின் சார்பாக கலைமாமணி விருது வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் தமிழ் எழுத்தாளர்களை ஊக்குவித்து சிறப்பிக்கும் வகையில் இலக்கிய மாமணி விருது உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியத்திற்கு வளம் சேர்க்கும் எழுத்தாளர்கள் 3 பேருக்கு ஆண்டுதோறும் இந்த விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பெற்றது. மேலும் இவ்விருதாளர்களுக்கு விருதுத்தொகையாக ரூ.5.00 இலட்சம், ஒரு சவரன் தங்கப்பதக்கம், தகுதியுரையும் வழங்கப்படும். அறிவிப்பிற்கிணங்க தமிழுக்கும் அவ்வகையில் மேற்கண்ட தமிழ் இலக்கியத்திற்கும் வளம் சேர்க்கும் வகையில் பல்வேறு படைப்புகளை படைத்தும் பன்முக நோக்கில் தொண்டாற்றி வரும் தமிழறிஞர்களிடமிருந்து 'இலக்கிய மாமணி" விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதற்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.com என்ற வலைத்தளத்தில் விருது விண்ணப்பப் படிவம் என்ற பகுதியில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பிப்பவர்கள், தன்விவரக் குறிப்புகளுடன் நிழற்படம் (2), எழுதிய நூல்களின் பெயர்ப்பட்டியல் மற்றும் அந்நூல்கள் ஒவ்வொன்றிலும் ஒருபடி வீதம் தமிழ் வளர்ச்சி இயக்குநர், தமிழ் வளர்ச்சி இயக்ககம், தமிழ்ச்சாலை, எழும்பூர். சென்னை - 600 008 என்ற முகவரிக்கு 04.01.2022 ஆம் நாளுக்குள் அனுப்ப வேண்டும். மேலும் tamilvalarchithurai@gmail.com விண்ணப்பம் மற்றும் என்ற மின்னஞ்சல் தொ.பே.எண். 044 - 28190412 / 044 - 28190413 பிற இணைப்புகள் முகவரிக்கு மட்டும் அனுப்பலாம். வெளியீடு: இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத்துறை, சென்னை-9

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot