108 ஆம்புலன்ஸ்’ல் வேலைவாய்ப்பு முகாம்
108 அம்புலன்ஸல் பாதுகாப்பாக வாகனம் ஒட்டுதல் மற்றும் அவசரகால மருத்துவ முதலுதவி செய்திட அறிவியல் சார்ந்த பட்டம் பயின்ற ஓட்டுநர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.
கீழே கொடுக்கப்பட்டுள்ள அடிப்படை தகுதி உள்ளவர்கள் மட்டும் இம்முகாமில் கலந்து கொண்டு பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம்.
அடிப்படைத் தகுதிகள்
1. 22 வயதுக்கு மேலும் 35 வயதுக்கு மிகாமலும் இருக்க வேண்டும்
2. உயரம் 162.5 சென்டி மீட்டருக்கு குறையாமல் இருக்க வேண்டும்.
3.B.Sc. Zoology, Botany, Bio Chemistry, Micro Biology, Biotechnology, Chemistry பட்டம் பெற்றவர்கள். 4. ANM, DFPN, DNA, DMLT / D.Pham., (12 ஆம் வகுப்பு தேர்ச்சிக்கு பிறகு 2 ஆண்டு டிப்ளமோ)
5. இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் எடுத்து குறைந்த பட்சம் 3 ஆண்டுகள் நிறைவு பெற்றிருக்க வேண்டும் மற்றும் Badge வாகன உரிமம் எடுத்து 1 ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
மாத ஊதியம் ரூ.14,966/- மற்றும் இதர படிகள்
பணியிடம் : தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் நியமனம். பணி நேரம் : 12 மணி நேர ஷிப்ட் முறையில் இரவு ஷிப்ட், பகல் ஷிப்ட் என மாறும். மேற்குறிப்பிட்ட தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் தங்களுடைய கல்வி, ஓட்டுநர் உரிமம் மற்றும் அனுபவம் தொடர்பான அனைத்து அசல் சான்றிதழ்களையும் சரிப்பார்ப்பதற்காக நேரில் கொண்டு வரவேண்டும்.
நாள் : 19/12/2021
நேரம் : காலை 10 முதல் 2 மணி வரை
இடம் : கலையரங்கம், அடுக்கம்பாறை அரசு மருத்துவ கல்லூரி வளாகம், வேலூர்,
No comments:
Post a Comment