பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!! - Kalviseithi
ads
Responsive Ads Here

Friday, December 31, 2021

பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!!

பொது மாறுதல் கோரும் விண்ணப்பங்களை 03.01.2022 முதல் 05.01.2022க்குள் ஒப்படைக்க வேண்டும் - திருப்பத்தூர் முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்!

தமிழ்நாடு பள்ளிக் கல்வி - 2021 2022 ஆம் ஆண்டு அறிவிப்புகள் - திருப்பத்தூர் மாவட்டம், அரசு ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி / தொடக்க நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி உயர்நிலை / மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் சார்ந்த ஆணை வெளியிடப்பட்டன மாறுதல் கோரும் விண்ணப்பம் சமர்ப்பிக்க விபரம் தெரிவித்தல் - சார்பு.

பார்வை:

யள்ளிக்கல்வி ஆணையர் கடித நக.எண் 25154/ அvஇ2/2021, நாள். 2211.2021 2.அரசாணை (நிலை) எண்.:176 பள்ளிக்கல்வி (பக51))துறை நாள். 17.12.2021 3தமிழ்நாடு பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள் நக.எண்.25154அ இ2/2021 நாள், 30.12.2021

திருப்பத்தூரி மாவட்டத்தில் உள்ள மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் அனைத்து வகை அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் நேரடி கவனத்திற்கு,

பார்வை 2ல் காணும் அரசாணையின்படி அரசு ஊராட்சி ஒன்றியம் / நகராட்சி தொடக்க நடுநிலை பள்ளிகள் மற்றும் அரசு நகராட்சி உயர்நிலை மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு நெறிமுறைகள் மூலம் இணையதளத்தின் வாயிலாக மேற்கொள்ளப்பட உள்ளதால் ஆசிரியர்கள் மாறுதல் தொடர்பான அரசாணை கலந்தாய்வு அட்டவணை மற்றும் மாறுதல் கோரும் விண்ணப்பம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது. மேலும் மாறுதல் கலந்தாய்வு அரசாணையில் வழங்கப்பட்ட வழிமுறைகள் மற்றும் அறிவுரைகளை பின்பற்றி மாவட்டக் கல்வி அலுவலர்கள் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட அரசு உயர்/மேல்நிலைப்பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் தொடக்கக்கல்வித்துறை அளவில் மாறுதல் கோரும் விண்ணப்பங்கள் பெறப்பட்டு கல்வி மேலாண்மை தகவல் முகமை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட வேண்டும் என திருப்பத்தூர் மற்றும் வாணியம்பாடி மாவட்டக்கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. மேலும் அரசு/நகராட்சி உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி/இடைநிலை/சிறப்பாசிரியர்கள் உடற்கல்வி இயக்குநர் நிலை 1 மற்றும் 2 / தொழிற்கல்வி முதுகலை ஆசிரியர்கள் கணினி ஆசிரியர்கள் நிலை 1 ஆகியோரின் பொது மாறுதல் கோரும் விண் ணப்பம் 03.012022 முதல் 05012022 வரை காலை 10.00 மணி முதல் மாலை 05.00 மணிக்குள் முதன்மைக்கல்வி அலுவலகத்தில் நேரில் ஒப்படைக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள வழி முறைகளை பின்பற்றி உரிய விதிகளின்படி எவ்வித புகார்களுக்கும் இடமளிக்காவண்ணம் செயல்படுமாறு மாவட்டக்கல்வி அலுவலர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இணைப்பு- 1அரசாணை எண்.176, பள்ளிக் கல்வி (பக5(1) துறை நாள். 17.12.2021

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot